Friday, August 5, 2011

baraath

லைலத்துல் பராஅத்’;,
பராஅத் இரவு’,
ஷபே பராஅத்’;

என்று பல பெயர்களில் கொண்டாடப்பட்டுவரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்பார் இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகிறது.லைலத்துல் கத்ரு, லைலத்துல் ஜும்ஆபோன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.
ஆனால் லைலத்துல் பராஅத்என்ற சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.
பின் ஏன் இந்த இரவைக் கொண்டாடுகிறார்கள்?
இந்த இரவைக் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதைப்பற்றி நமது மக்களின் நம்பிக்கை என்ன? அவர்கள் இதை கொண்டாடுவதற்குக் கூறும் காரணங்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்.
1. பராஅத் இரவு.
பராஅத் இரவு குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் நிச்சயமாக நாம் பாக்கியம் மிக்க இரவில் இந்த குர்ஆனை அருளினோம். (44:03) என்று வரும் குர்ஆன் வசனம் இந்த பராஅத் இரவையே குறிக்கிறது என்று கூறுகின்றனர்.
இந்த வசனம் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளான பராஅத் இரவைக் குறிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பாக்கியம் மிக்க இரவுஎது என்பதை வேறு சில வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டதுஎன்று திருக்குர்ஆன் 2:185-வது வசனம் கூறுகிறது.
இதிலிருந்து இந்த பாக்கியம் மிக்க இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது என்று மிகத் தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம். அது ரமளானின் எந்த இரவு என்பதை நாம் தேடிப்பார்க்கும் போது லைலத்துல் கத்ர் இரவுpல்நாம் திருக்குர்ஆனை அருளினோம் (97:01)என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான்.
எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்ற பாக்கியம் மிக்க இரவுஎன்பதும்,’லைலத்துல் கத்ர் இரவுஎன்பதும் ரமளான் மாதத்தில் வருகின்ற ஒரே இரவு தான் என்பது தெளிவாகிறது.
எனவே அந்த இரவு ஷஃபானின் 15-வது இரவு என வாதிடுவோருக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு திருக்குர்ஆன் ஷஃபானின் 15-வது இரவில் அருளப்பட்டது எனக் கூறுவது ரமளானில் தான் குர்ஆன் அருளப்பட்டதுஎன்ற இறைவனின் சொல்லுக்கு மாற்றமானதாகும்.
44:03 என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டுதான் பராஅத் என்று ஒரு இரவை முஸ்லிம்கள் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
இல்லாத ஒரு இரவைக் கற்பனை செய்து சிலர் அல்லாஹ்வின் வசனத்திற்கு பொருத்த மற்ற விளக்கம் கொடுத்து அந்தநாளுக்கென சிலசடங்குகளை உருவாக்கி அறியாத மக்களை தவறான வழிகளில் வழிநடத்துகின்றனர்.
அடுத்து, ஷஃபான் மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதாக நம்புவதும் ரமளானில் அருளப்பட்டதுஎன நம்புவதற்கு எதிரானதாகும்.
ஷஃபானில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்போர் மேலும் சில காரணங்களை முன் வைக்கின்றனர். அதாவது:-
குர்ஆன் இரண்டு இரவுகளில் அருளப்பட்டது. பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு அருளபட்டது ஒரு இரவு. அங்கிருந்து சிறிது சிறிதாக நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகின்றனர். இதற்கு ஏற்கத்தக்க எந்த நபிமொழியும்; சான்றாக இல்லை. இந்த இரவுக்கும் பராஅத் இரவுக்கும் சம்பந்தமே இல்லை.

2. மனிதனின் விதி.
இந்த இரவில் தான் மனிதனின் விதி நிர்ணயிக்கப் படுகிறது என்று நபி (ஸல்)
அவர்கள் சொன்னார்கள் என உத்மான் பின் முஹம்மது பின் முகீரா
அறிவிக்கிறார்கள் என்ற ஒரு நபிமொழியை பராஅத் இரவின் மாண்புக்கு ஆதாரமாக
முன் வைக்கின்றனர்.
இந்த அறிவிப்பாளர் தாபியீன்களில் இறுதியானவர் என்றும்,தபஉத் தாபியீன்களைச்
சார்ந்தவர் என்றும் இருவிதமான கருத்துகள் உள்ளன. இந்த ஹதீஸில் ஸஹாபியின்
தொடர்விட்டுப் போனதால் இந்த நபி மொழி ஏற்கத்தக்கதல்ல.
3. ஆடுகளின் முடிஅளவு மன்னிப்பு :-

நபி (ஸல்) அவர்கள்,
ஷஃபானில் வரும் பராஅத் இரவின் பாதியில் இறைவன் கீழ் வானத்தில் இறங்கி பனீ கலபு கூட்டத்தினரின் (ஆயிரமாயிரம்) ஆடுகளுக்கு இருக்கும் உரோமங்களின் எண்ணிக்கையிலும் அதிகமானவர்களை மன்னிப்பான் என்றும்;, நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான் என்றும் கூறினார்கள்
என்னும் நபிமொழியை ஆயிஷh(ரலி)அவர்கள் அறிவித்ததாகக் கூறுகின்றனர். (அறிவிப்பவர்: உர்வா அவர்கள்) இந்த நபி மொழியை அபூகதீர் என்பவர் யஹ்யாவிடமிருந்தும், யஹ்யா என்பவர் உர்வாவிடமிருந்தும், உர்வா என்பவர் இதை அறிவிப்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் எவரும் நேரில் சந்திக்கவில்லை என்பதால் இந்த ஹதீஸும் ஏற்பதற்கில்லை.

4. அடுத்து, பராஅத் நோன்பு:-
ஷஃபானின் பதினைந்தாவது இரவு வந்தால் நோன்பு வையுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்கள் உள்ளன.இதை அறிவிக்கும் அபூ ஸப்ரா பின் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் பொய்யர் என இமாம் அஹ்மத் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில்; ஷஃபானின் பாதி வந்தால் நோன்பு வைக்கக்கூடாது என வருகிறது.
ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்று வந்த  நபி (ஸல்) அவர்கள் பிந்திய 15 நாட்களில் நோன்பு நோற்பதை தடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஷஃபான் மாதத்தின் பாதியை அடைந்து விட்டால் நோன்பு வைக்காதீர்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூது, நஸயீ,திர்மிதி,இப்னு மாஜா).
இதில் அய்யாமுல் பீள்,வியாழன் வெள்ளிக் கிழமைகளில் வழமையாக நோன்பு நோற்போர் விதிவிலக்காவார்கள்.

எனவே பராஅத் இரவுக்கென தனியாக நோன்பு எதுவும் கிடையாது.
இந்த ஆதாரமற்ற ஹதீஸ்களையும் தகவல்களையும் வைத்து பின் வருமாறு பல பித்அத்கள், சடங்குகள், சம்பிரதயங்கள் முதலியற்றை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றியுள்ளனர்.
5. விசேச ஆராதனைகள்,யாஸீன்கள்,ராத்தீபுகள்.

1.முதலில் மூன்று யாஸீன்கள்:-
இந்த இரவில் அடுத்தடுத்து விசேச வணக்கங்கள் தொடர்ந்து
நடை பெற்றுக்கொண்டிருக்கும்.
முதலாவதாக மஃரிப் தொழுததும் மூன்றுயாஸீன்கள் ஓதிஹதியா செய்யவேண்டும் என முல்லாக்கள் கூறி அதைவியாபாரமாக்கி விட்டார்கள்.  எனவே போட்டி போட்டுக்கொண்டு,

1. பாவ மன்னிப்பிற்கும்
2. ரிஸ்கு-இரண பாக்கியத்திற்கும்
3. நீண்ட ஆயுளுக்கும்
என மூன்று யாஸீன்கள் ஓதுவார்கள்.

2. அடுத்து ஆங்காங்கே திக்ருகள், ராத்தீபுகள், குத்பிய்த்துகள்,
மவ்லிதுகள் என வரிசையாக நடைபெறும்.

மார்க்கத்தின் பெயரால் நடக்கும் இந்தப் போலிச் சடங்குகளுக்கு
எந்த ஆதாரமும் கிடையாது.

6. விசேச உணவு படைப்புகள் 
இந்த இரவில் அல்லாஹ் வின் அருள் பெருகிடவும் உணவு பாக்கியங்கள் பெற்றிடவும் ஊருக்கேற்றாற் போல் பல் வேறு விதமான பலகாரங்களையும், உணவுகளையும் படைத்து அமர்க்களப்படுத்து வார்கள். (யாஸீன் ஓதியவர்களை மகிழ்விக்கத்தான்.)

7. கப்று ஸியாரத்:-
இவ்வளவு நாட்களும் நினைவு படுத்த முடியாது போனதற்காக இறந்த போன பெற்றோர்கள்,உறவினர்கள், அவ்லியாக்கள் சமாதிகளுக்குச் சென்று விசேச ஸியாரத்,பிரார்த்தனைகள் நடை பெறும்.

8. விசேச வணக்கங்கள்:- 
முதல் தொழுககை : இஷhத் தொழுகைக்கு முன் இரண்டிரண்டு ரக்அதகளாக நான்கு ரக்அத்கள்தொழவேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா வுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 25 முறைகள் ஓதவேண்டும்.
இரண்டாவது தொழுகை: இஷhத் தொழுகைக்குப் பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 30 ரக்அத்கள்தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 3 முறைகள் ஓதவேண்டும்.
மூன்றாவது தொழுகை : இஷாத் தொழுகைக்கு பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 12 ரக்அத்கள்தொழவேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 5 முறைகள் ஓதவேண்டும்.
நான்காவது தொழுகை : இஷhத் தொழுகைக்குப் பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 100 ரக்அத்கள்தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 3 முறைகள் ஓதவேண்டும்.
அலியே! ஷஃபானின் 15-வது இரவில் 100 ரக்அத்துகள் தொழுவதை மறந்து விடாதே! அவற்றில் குல்ஹுவல்லாஹ் 100 தடவைகள் ஓதுவதை மறந்து விடாதே!போன்ற பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன. என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தமது நக்லுல் மன்கூள் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
ஐந்தாவது தொழுகை : தஸ்பீஹ் தொழுகை. முன்னூறு தஸ்பீஹ்கள் ஓதித் தொழும் இந்தத் தொழுகைக்கும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸீம் கிடையாது.
இவற்றையெல்லாம் தெடர்ந்து நடத்திவிட்டு இறுதியாக நோன்பையும் நோற்றுக் கொள்வார்கள்.
மார்க்கத்தின் பெயரால் உலா வரும் இந்தப் போலிச் சடங்குகளையும் பித்அத்களையும் இனம் கண்டு தவிர்த்துக் கொண்டு நமது ஈமானைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்கு அருள் புரிவானா

Thursday, August 4, 2011

அல்லாஹ்வை நம்புதல்

,iw ek;gpf;if
my;yh`; thdj;jpYs;s mu;rpd; kPJ ,Uf;fpd;whd;.epr;rakhf cq;fs; ,iwtd; my;yh`;Nt mtd; thdq;fisAk; G+kpiaAk; MW ehl;fspy; gilj;jhd; gpd;dh; mtd; mu;rpy; (rpk;khrdj;jpy;)mku;e;jhd;.(10:3)
(20;: 5)(67:16)
egp (]y;) mtu;fs; xU ngz;dplk; my;yh`; vq;Nf ,Uf;fpwhd; vdf; Nfl;lhu;fs; mjw;fts; thdj;jpy; ,Uf;fpwhd; vd gjpy; $wpdhs;. ehd; ahu; vdf; Nfl;lhu;fs; mjw;fts; my;yh`;tpd; J}jnudf; $wpdhs; mg;NghJ ]y; mtu;fs; mtspd; v[khdplk; ,ts; K kpdhf ,Uf;fpwhs; ,tiu cupikapl;L tpLq;fs; vdf; $wpdhh;fs; (K];ypk;);  
my;yh`;tpl;F cUtk; cz;L : mtdJ jFjpw;Fk; fz;zpaj;jpw;Fk; Vw;wthW cUtk; cz;L vd ek;gpf;if nfhs;s Ntz;Lk;. mtdJ ve;jg; gilg;gpdq;fSf;Fk;  mtid xg;ghf;fhky; (mtidg; Nghy; vg;gilg;Gk; ,y;iy)vd;W cWjpahf ek;gpf;if nfhs;s Ntz;Lk;.
ليس كمثله شيْ وهو السميع البصير
My;yh`; $Wfpwhd; : mtidg; Nghy; vJTk; ,y;iy mtd; nrtiAWgtd; ghu;g;gtd;. (42:11)

i]j;jhdpd; Cryhl;lq;fis tpl;Lk; ghJfhg;G NjLtJ
01 .(my;yh`;itg; gw;wp re;Njfk; te;jhy; filg;gpbf;f Ntz;ba xOq;Ffs;)
,uTj; njhOiff;F jf;gPu; $wpaJk; : ]y; mtu;fs; gpd;tUkhW xJthu;fs;.
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالي جدك ولا إله غيرك   الله أكبر كبيرا  أعوذ باالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه
02.my;yh`;it ahh; gilj;jhd; vd;W re;Njfk; te;jhy;:
أعوذ بالله من الشيطان الرجيم  vd;W $w Ntz;Lk;.
03.my;yh`;itg; gw;wp re;Njfk; te;J ntspg;gilahf mij ahuplkhtJ nrhy;yp tpl;lhy; gpd;tUkhW $w Ntz;Lk;
الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له  كفوا أحد  vd;W $wp tpl;L gpd;G ,lJ gf;fk; %d;W Kiw Jg;g Ntz;Lk; gpd;G أعوذ بالله من الشيطان الرجيم  vd;W $w Ntz;Lk;.
04. gof;f tof;fj;jpy; (ehT Ke;jp nrhy;yp tpl;lhy;)
لا إله إالله وحده لا شريك له    3 tpLj;jk;
 أعوذ بالله من الشيطان الرجيم   3 tpLj;jk;
,lJ gf;fk; 3 tpLj;jk; Cjpf; nfhs;s Ntz;Lk;.
mij fzf;fpy; vLf;f $lhJ.
Mjpfkhf
لاحول ولا قوة إلا بالله

Wednesday, August 3, 2011

வட்டி

வட்டியின் கிளைகளாக நபியவர்கள் சுட்டிக்காட்டிய சில அம்சங்களைக் கீழே அவதானிப்போம்.
صحيح مسلم 4147 عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلاً بِمِثْلٍ سَوَاءً بِسَوَاءٍ يَدًا بِيَدٍ فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ ».

தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே பணம் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த வகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டால் உடனே பணம் செலுத்தும் வகையில் நீங்கள் நாடியவாறு விற்பனை செய்யுங்கள் என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபாதத் பின் ஸாபித் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம்4177
இதே ஹதீஸ் சிறிய மாற்றத்துடன் கீழுள்ளவாறு வருகின்றது.
صحيح مسلم 4148 عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « الذَّهَبُ بِالذَّهَبِ وَالْفِضَّةُ بِالْفِضَّةِ وَالْبُرُّ بِالْبُرِّ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ وَالتَّمْرُ بِالتَّمْرِ وَالْمِلْحُ بِالْمِلْحِ مِثْلاً بِمِثْلٍ يَدًا بِيَدٍ فَمَنْ زَادَ أَوِ اسْتَزَادَ فَقَدْ أَرْبَى الآخِذُ وَالْمُعْطِى فِيهِ سَوَاءٌ ».
தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே பணம் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். எவர் இதில் அதிகரிக்கின்றாரோ, அல்லது அதிகரிக்குமாறு கோருகின்றாரோ அவர் வட்டி எடுத்து விட்டார். இதில் எடுப்பவரும், கொடுப்பவரும் சமமே.
அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4148
மற்றொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.
صحيح مسلم – 4138 – عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ وَلاَ تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلاَ تَبِيعُوا الْوَرِقَ بِالْوَرِقِ إِلاَّ مِثْلاً بِمِثْلٍ وَلاَ تُشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ وَلاَ تَبِيعُوا مِنْهَا غَائِبًا بِنَاجِزٍ ».
சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம் வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். சரிசமமாக இருந்தாலே தவிர வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். அவற்றைக் கடனுக்கு விற்க வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4138
தங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கான தேவையும், அவசியமும், முறையும் நபியவர்களின் காலத்தில் அவ்வளவாக இல்லையென்றாலும் இன்று இதன் அவசியம் உணரப்பட்டு விட்டது. அத்துடன் தங்கத்தின் விலையில் நிமிடத்துக்கு நிமிடம் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை அறிந்து கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களும் இன்று சைகவமாகிவிட்டன. ஆகவே இந்த ஹதீஸ்கள் சமகால வணிக முறைகளில் எவ்வளவு அவசியமாயுள்ளன என்பதை விளங்கலாம்.
இன்னொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.
صحيح مسلم 4141 – عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لاَ تَبِيعُوا الذَّهَبَ بِالذَّهَبِ وَلاَ الْوَرِقَ بِالْوَرِقِ إِلاَّ وَزْنًا بِوَزْنٍ مِثْلاً بِمِثْلٍ سَوَاءً بِسَوَاءٍ
.நிறையில் சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4138
வேறொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.
صحيح مسلم – 4164 – كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « الطَّعَامُ بِالطَّعَامِ مِثْلاً بِمِثْلٍ
உணவுக்கு உணவை விற்பதாயின் சரிசமமாக இருக்க வேண்டும். என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4164
மற்றுமொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.
صحيح مسلم – 4143 – فَإِنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « الْوَرِقُ بِالذَّهَبِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالْبُرُّ بِالْبُرِّ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالشَّعِيرُ بِالشَّعِيرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ وَالتَّمْرُ بِالتَّمْرِ رِبًا إِلاَّ هَاءَ وَهَاءَ ».
உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும். உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர கோதுமைக்குக் கோதுமையை விற்பது வட்டியாகும். உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர பேரீத்தம் பழத்துக்குப் பேரீத்தம் பழத்தை விற்பது வட்டியாகும். என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4143
வட்டியின் கிளைகளை நடை முறை ரீதியாகவும் நபியவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள் . இந்த வரையரைகளை நபியவர்கள் செயல்படுத்திய விதங்களை கீழ்வரும் ஹதீஸ்கள் தெளிவாய் விளக்குகின்றன.
صحيح البخاري
2201،2202 – عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَ رَجُلًا عَلَى خَيْبَرَ فَجَاءَهُ بِتَمْرٍ جَنِيبٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكُلُّ تَمْرِ خَيْبَرَ هَكَذَا قَالَ لَا وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لَنَأْخُذُ الصَّاعَ مِنْ هَذَا بِالصَّاعَيْنِ وَالصَّاعَيْنِ بِالثَّلَاثَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَفْعَلْ بِعْ الْجَمْعَ بِالدَّرَاهِمِ ثُمَّ ابْتَعْ بِالدَّرَاهِمِ جَنِيبًا
நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக!இல்லை இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக!எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : புஹாரி 2201,2202
صحيح البخاري 2312 – عَنْ يَحْيَى قَالَ سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَبْدِ الْغَافِرِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ بِلَالٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمْرٍ بَرْنِيٍّ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَيْنَ هَذَا قَالَ بِلَالٌ كَانَ عِنْدَنَا تَمْرٌ رَدِيٌّ فَبِعْتُ مِنْهُ صَاعَيْنِ بِصَاعٍ لِنُطْعِمَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ أَوَّهْ أَوَّهْ عَيْنُ الرِّبَا عَيْنُ الرِّبَا لَا تَفْعَلْ وَلَكِنْ إِذَا أَرَدْتَ أَنْ تَشْتَرِيَ فَبِعْ التَّمْرَ بِبَيْعٍ آخَرَ ثُمَّ اشْتَرِهِ
நபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) பர்னீஎனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் இது எங்கிருந்து கிடைத்தது?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி)என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்!என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அடடா! இது வட்டியேதான்! இது வட்டியேதான்! நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக!என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரழி)
ஆதாரம் : புஹாரி 2312
பணப் புழக்கம் இல்லாத பண்டமாற்று முறை காணப்பட்ட காலங்களில் நடை பெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றில் காணப்படும் வட்டியின் வடிவங்களை நபியவர்கள் இதில் கூறுகிறார்கள். பணப் புழக்கம் வந்த பின்னரே வட்டியைப் பற்றி பலரும் பேசினார்கள். ஆனால் இதற்கு முன்னரான பண்டமாற்று வியாபார முறை காணப்பட்ட காலங்களில் அதில் காணப்படும் வட்டி முறை பற்றிக் கூறுவது சிரமமான ஒரு காரியமாகும். எனவே நபியவர்கள் அது பற்றியும் இந்த ஹதீஸில் விளக்கியிருப்பதானது குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றொரு ஹதீஸைப் பாருங்கள்
صحيح مسلم – 4160 – عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ قَالَ اشْتَرَيْتُ يَوْمَ خَيْبَرَ قِلاَدَةً بِاثْنَىْ عَشَرَ دِينَارًا فِيهَا ذَهَبٌ وَخَرَزٌ فَفَصَّلْتُهَا فَوَجَدْتُ فِيهَا أَكْثَرَ مِنِ اثْنَىْ عَشَرَ دِينَارًا فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ « لاَ تُبَاعُ حَتَّى تُفَصَّلَ ».
ஹைபர் தினத்தன்று பனிரெண்டு தீனார்களுக்கு ஓரு மாலையை வாங்கினேன். அதில் தங்கமும், முத்துமணிகளும் இருந்தன. அவற்றை வெவ்வேறாகப் பிரித்தேன். பனிரெண்டு தீனார்களுக்கு அதிகமான தங்கத்துண்டுகள் அதில் காணப்பட்டன. எனவே இதை நபியவர்களிடம் தெரிவித்தேன்.இவை போன்றன வெவ்வேறாகப் பிரிக்கப்படாமல் விற்கப்படக் கூடாதுஎன்றார்கள்.
அறிவிப்பவர்: பலாலா பின் உபைத் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4160
பனிரெண்டு தீனார்களுக்கு சமமாக அந்த மலையில் தங்கம் இருந்தால் அதில் தவறேதுமில்லை.ஆனால் குறித்த தொகையை விடக் கூடுதலாக இருப்பதுவே இங்கே கவனிக்க வேண்டியது. குறைந்த தொகை கொடுத்து கூடுதல் பெறுமதிமிக்க ஒன்றை வாங்குவதாக அமைந்து, ஒருவருக்கு  கொல்லை இலாபத்தையும் மற்றவருக்கு அநியாயத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது. இதைக் கவனித்து நபியவர்கள் இவை போன்றன வெவ்வேறாகப் பிரிக்கப்பட்ட பின்பே விற்கப்பட வேண்டும் அல்லது மாலையில் காணப்படும் தங்கத் துண்டுகளுக்கு சமமான தொகைக்கு விற்கப்பட வேண்டும் என்று கூறியியுள்ளார்கள் என விளங்கலாம்.
இந்த ஹதீஸ்களின் வரை முறை அடிப்படையில் இன்றைய தங்கம் மற்றும் பணமாற்று வியாபாரத்தின் நடைமுறைகளை அலசுவோம் அதற்கு முன்னர் கீழ்வரும் பலவீனமான ஹதீஸை வைத்து வட்டியோடு தொடர்புபடாமல் இக்காலத்தில் இருக்க முடியாது என்று சிலர் கூறுவர்.
سنن أبى داود-ن – 3333 – عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لاَ يَبْقَى أَحَدٌ إِلاَّ أَكَلَ الرِّبَا فَإِنْ لَمْ يَأْكُلْهُ أَصَابَهُ مِنْ بُخَارِهِ ». قَالَ ابْنُ عِيسَى « أَصَابَهُ مِنْ غُبَارِهِ ».
ஒரு காலம் வரும் அக்காலத்தில் வட்டி சாப்பிடாத எவரும் இருக்கமாட்டார் அதை சாப்பிடா விட்டாலும் அதன் வாடையையாவது அவர் நுகருவார். என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி)
ஆதாரம் : அபூதாவூத் 3333
முதலில் இது ஒரு பலவீனமான செய்தியாகும். அடுத்து, இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமே இல்லாத ஒரு காலம் ஏற்படும் என்று கூட விளங்கலாம். வட்டியில்லாமல் அழகாக வாழ முடியும். எக்காலத்துக்கும் சாத்தியமான வழிகாட்டல்களையே இஸ்லாம் வகுத்துள்ளது. ஆகவே எவ்வகையிலும் இது ஏற்கத்தக்கதல்ல. ஆசை கூடக் கூட வட்டியும் கூடும். அது குறைந்து விட்டால் வட்டியும் குறைந்து விடும் என்பதுவே யதார்த்தம். ஆனால் நம்மை அறியாமல் வட்டியோடு தொடர்புறும் சந்தர்ப்பங்களுமுண்டு. இவை தவிர்க்க முடியாதவைகளாகும். இதில் நாம் குற்றவாளிகளாகமாட்டோம். இனி விடயத்திற்கு வருவோம்

மேலுள்ள ஹதீஸ்களை நன்கு அவதானித்துக் கொண்டு இன்றுள்ள வர்த்தக நடவடிக்கைகளைக் கொஞ்சம் அலசுவோம். இன்று புழக்கத்தில் காணப்படும் பணமானதும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். நபியவர்கள் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட இஸ்லாமிய அரசு ஆண்ட காலங்களிலும் முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளில் தங்கமே பணமாக உபயோகிக்கப்பட்டது. தற்போது நமது புழக்கத்திலுள்ள பணம் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை இன்னும் விளங்கச் சொல்வதானால், 90 களில் பாவனையிலிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை ஒருவர் வைத்திருக்கிறார், இன்னொருவர் 2011ல் பாவனைக்கு வந்த  ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்திருக்கிறார் என்றால்  90 களில் வெளியான நோட்டை விட 2011ல் பாவனையில் வந்த நோட்டு பெறுமதி மிக்கதாகிவிடப் போவதில்லை. புதியதோ பழையதோ வருடங்கள் முந்திப்பிந்தி வந்தாலும் ஆயிரம் ரூபாய், என்றும் ஒரே பெறுமதியோடுதான் இருக்கின்றது. இதன் பெறுமதியைத் தீர்மானிப்பது மத்திய வங்கியே. மத்திய வங்கி நினைத்தால் இதே ஆயிரம் ரூபாயை செல்லாக் காசாகவும் ஆக்கலாம். ஆகவே நமது கைகளில் உள்ள நோட்டுக்களை சகல விதத்திலும் தீர்மானிப்பதாக மத்திய வங்கி காணப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் தங்க இருப்பை வைத்தே பணம் புழக்கத்தில் விடப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின் தங்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களால் விளைந்ததே இந்த நாணயக் கொள்கையாகும். உண்மையில் இதில் பல குழறுபடிகள் காணப்படுகின்றன. ஒருவர் 80 களில் நம்மிடம் 500 ரூபாயைக் கடனாகப் பெற்று 2011ல் அதைத் திருப்பித் தருகின்றார் என்றால் அதைப் பெறுவதில் நமக்கு பலனேதுமில்லை. ஏனெனில் இதே தொகையை அன்றைக்கே அவர் திருப்பித் தந்திருந்தால் அதற்கு ஒரு சிறு காணித்துண்டையே வாங்கியிருக்கலாம். சர்வதேச அளவில்  பொதுவான நாணயக் கொள்கையொன்று பின்பற்றப்படுகின்றது. அதிகப் புழக்கமிருந்தால் அதற்கேற்ப நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. புழக்கம் கூடியன நாணயங்களாகவும், புழக்கத்தில் குறைந்தன நோட்டுக்களாகவும் அச்சிடப்படுகின்றன. பணவீக்கத்தால் இன்று பணத்தின் பெறுமதி குறைந்து கொண்டே செல்கின்றது. அதனால்தான் இவ்வருடம் குறைந்த அளவாக இரண்டு இலட்சங்களுக்கு ஸகாத் கொடுத்தவர் அடுத்த வருடம் நான்கு இலட்சங்களுக்குத்தான் ஸகாத் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே பணத்தின் பெறுமதி குறைந்து கொண்டே செல்கின்றது. ஸகாத்தை மதிப்பிடுவதற்கு நாளுக்கு நாள் நாணயப் பெறுமதியை அவதானிக்க வேண்டியுள்ளது. ஆனால் தங்கத்தின் பெறுமதியோ என்றைக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது. எனவே தங்க விலையில் ஏற்படும் மாற்றத்தால் இத்தகு பாதிப்புக்கள் விளைகின்றதாயின் தங்கமே இங்கு அனைத்தையும் தீர்மானிக்கின்றது பணமல்ல என்பதை விளங்கலாம். ஸகாத் கொடுக்கும் போது வருடா வருடம் அத்தொகையில் ஏற்றம் ஏற்பட்டுக் கொண்டே போகிறதென்றால் தங்கத்தின் விலையில் ஏற்றம் வருவதாலேயே இவ்வாறு நிகழ்கின்றது. ஸகாத் கடமையாகும் தொகை 10. 2.5 பவ்ன் என்றால் பவ்னின் விலை வருடா வருடம் கூடிக் குறைவதால் ஸகாத் தொகையிலும் இதே மாற்றம் ஏற்படுகின்றது. எனவே பணத்துக்கல்ல தங்கத்துக்கே நாம் ஸகாத் கொடுக்கின்றோம் என்பது இதிலிருந்து விளங்குகின்றது. நபியவர்கள் ஸகாத் கடமையை நிருணயித்ததும் அன்றைய காலத்தில் நாணயமாகவிருந்த தீனார், திர்ஹம் ஆகிய தங்கம், வெள்ளிக்குத்தான். ஆகவே இன்று உலகில் நாணயங்களும், நோட்டுக்களும் மக்கள் பாவனையில் பணமாகவிருந்தாலும் உண்மையில் இந்த நாணயங்களைத் தீர்மானிப்பது தங்கமும் வெள்ளியும்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
صحيح البخاري 2886 – عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعِسَ عَبْدُ الدِّينَارِ وَالدِّرْهَمِ …….
பொற்காசு, வெள்ளிக்காசு………………….. ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். புகாரி 2886
இந்த ஹதீஸில் பொற்காசு, வெள்ளிக்காசு………………….. ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் என்று நபியவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதும் தங்கமும், வெள்ளியும்தான் எப்போதும் நாணயங்களாக இருக்கும் என்பதை மையமாக வைத்துத்தான்.ஆகவே இன்றைக்கு பாவனையில் நாணயங்களும் நோட்டுக்களும் இருந்தாலும் இதுவும் ஒரு வகையில் தங்கம்தான் என்பதை மேலுள்ள தரவுகளை வைத்து அறியலாம்.
அப்படியாயின் நாம் இன்றைக்கு பணம் கொடுத்து நகையைக் கொள்வனவு செய்கின்றோம் என்றால் தங்கத்தைக் கொடுத்து தங்கத்தை வாங்குகிறோம் என்பதே அதன் அர்த்தம். எனவே இந்த சந்தர்பத்தில் நாம் கொடுக்கும் பணத்தின்(தங்கம்) அளவும் வாங்கப் போகும் நகையின் அளவும் பெறுமதியில் சமமாக இருக்க வேண்டும் என்பதே நிறையில் சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம் என்று நபியவர்கள் கூறியிருப்பதன் விளக்கமாகும். அப்படியென்றால் நகைக் கடைக்காரார்கள் தாம், பழைய நகையை வாங்கும் போது அவற்றில் அது, இது என பல குறைகளைக் கண்டு அதன் தரத்தைக் குறைத்து, பெறுமதியைக் குறைத்து வாங்குவதைப் போல தாம் விற்கும் புதிய நகைகளிலும் பழைய நகை வாங்கும் போது தாம் கடை பிடிக்கும் இம்முறைகளைக் கையாள வேண்டும் என்று விளங்கலாம். ஆனால் பெரும்பாலும் இது நடைபெறுவதில்லை. ஏதோ தாம் விற்கும் நகைகள்தாம் தரமானவை மற்றையவை அதாவது பழைய நகைகள் தரம் குறைந்தவை என்ற போக்கிலேயே இன்று நகை வியாபரம் நடை பெறுகின்து. இதில் தெளிவாகவே வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர். ஆனால் வியாபாரிகளோ கொல்லை இலபாமீட்டுகின்றனர். பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்யப்படும் வழமை பொதுவாகக் காணப்பட்ட போதிலும் இவ்வாறு ஏமாற்றி வாங்கப்படும் பழைய நகைகள் புதிய நகைகளை விடத் தரமானவையாக இருப்பதால் அவை பட்டை தீட்டப்பட்டு புதிய நகைகள் எனும் பேரில் விற்கப்படும் சந்தர்ப்பங்களுமுள்ளன. ஆகமொத்தம் இதில் ஏமாற்றம் நடைபெறுகின்றுது என்பதே நிதர்சனமாகும்.
தங்க வியாபாரத்தில் நடைபெறும் இஸ்லாத்துக்கு முரணான மற்றொரு அம்சமே தங்க வியாபாரிகள் முற்பணம் பெறுதலாகும். வாடிக்கையாளர்கள் தம்மை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு தாம் முற்பணம் பெறுவதாக இதற்கு நியாயம் சொல்லப்படுவதையும் பார்க்கின்றோம். ஆனால் இது நேரடியாக ஹதீஸுக்கு முரண்படுகின்றது என்பதுடன் தெளிவான வட்டியாகவும் காணப்படுகின்றது. கீழ்வரும் ஹதீஸ் இதையே உணர்த்துகின்றது. உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும். அகவே இவ்வாறு முற்பணம் பெறுவது தெளிவான வட்டியாகும் எனவே இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
பணத்துக்கேற்ப அளவில் சமமாகவிருந்து, முற்பணம் பெறாது, உடனடியாகப் பணம் கொடுத்து நகை வியாபரம் நடை பெறும் போது அதில் தவறில்லை என்பதையும் நாம் விளங்க வேண்டும். இம்முறைகளைப் பின்பற்றுவதால் நஷ்டமேதும் ஏற்படப் போவதுமில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் இஸ்லாம் சொல்லும் இம்முறைகளில் ஒருக்காலும் மாற்றம் செய்யவும் முடியாது.
வியாபாரத்தில் நடைபெறும் இஸ்லாத்துக்கு முரணான மற்றொரு அம்சம்தான் ஒரு நாட்டு நாணயத்தைக் கொடுத்து அதற்கு வேறொரு நாட்டின் நாணயத்தை மாற்றிக் கொள்ளும் போது ஏற்படும் தவறுகள். தங்கத்துக்கு வெள்ளியை மாற்றுவதைப் போன்றுதான் இதையும் அறிஞர்கள் கருதுகின்றனர். அதாவது நம் நாட்டுப் பணத்தைக் கொடுத்து இன்னொரு நாட்டுப் பணத்தை நாம் வாங்கும் போது நம் நாட்டுப் பணத்தைத் தங்கம் போல அல்லது வெள்ளியைப் போல, மற்ற நாட்டுப் பணத்தை தங்கம் போல அல்லது வெள்ளியைப் போலவே நாம் கருதவேண்டும். இவ்வாறான வியாபாரத்தில் நமக்கேற்றவாறு விலையைத் தீர்மானிக்க முடியும். அதில் தவறில்லை ஆனால் உடனுக்குடன் பணம் கொடுத்துத்தான் இவ்வியாபாரம் நடை பெறவேண்டும். அவ்வாறு உடனுக்குடன் பணம் பெறப்படவில்லையாயின் அது வட்டியாகும் கீழ்வரும் ஹதீஸ் இதையுணர்த்துகின்றது.
உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும்.
அறிவிப்பவர் : உமர் (ரழி)
ஆதாரம் : முஸ்லிம் 4143
பரவலாக இன்று வியாபாரத்தில் இடம் பெறும் இன்னொரு பாவம்தான் அவசரமாகப் பணம் தேவைப்படும் போது தன்னிடமுள்ள காசோலையைக் கொடுத்து பணம் பெறுவதாகும். ஒருவருக்கு அவசரமாகக் காசுதேவைப்படுகின்றது. ஆனால் கைவசம் காசு இல்லை. காசோலைதான் இருக்கிறது என்றால் அதை எடுத்துக் கொண்டு குற்றிப்பிட்ட ஒரு தொகையை  கூலியாக எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தைக் கொடுக்கும் வியாபாரம் இன்று பரவலாக நடைபெறுகின்றது. இது முற்றிலும் மார்த்துக்கு முரணான அம்சமாகும். காசோலையும் (அது கடன் வகை சார்ந்ததாய் இருந்தாலும்) ஒரு வகையில் தங்கம்தான். ஏனெனில் தங்கத்துக்கு மாற்றீடாகவே இது பயன்படுத்தப் படுகின்றது. எனவே காசோலையில் உள்ள பெறுமதிக்குக் குறையாமல்தான் பணம் கொடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தொகையைக் குறைக்கக் கூடாது அவ்வாறு செய்தால் அது வட்டி என்று இஸ்லாம் கூறுகின்றது.
மேலே நாம் பார்த்த முறைகளைக் கவனத்திற்கொண்டு  வியாபாரம் செய்வோமானால் அல்லாஹ் அதில் நமக்கு பரகத் செய்வான் எனும் நம்பிக்கை நம் மனதில் ஆழமாகப் பதியுமானால் நிச்சயம் அது நம்மில் பல மாற்றங்களையும், புதிய உத்வேகங்களையும் ஏற்படுத்தும் என்பதுடன் இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்கள் மனித குலத்துக்கு நன்மையானவையே தீங்கையும், இழப்பையும் ஏற்படுத்தும் சட்டங்களை இஸ்லாம் ஒரு போதும் சொல்லவில்லை என்பதுவே உண்மையாகும்.